LATEST

Search This Blog

Translate

யார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ! குத்துச்சண்டை வீரர் to பிரதமர்...

BUN TECH

யார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ! குத்துச்சண்டை வீரர் to பிரதமர்...

ஜஸ்டின் துரூடோ
நா.உ
Justin Trudeau 2014-1.jpg
2014 இல் ட்ரூடோ
23ஆவது கனடாவின் பிரதமர்
பதவியேற்பு
நவம்பர் 4, 2015 [1]
அரசர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர்டேவிட் ஜோன்ஸ்டன்
முன்னவர்இசுட்டீவன் கார்ப்பர்
கனடா லிபரல் கட்சி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஏப்ரல் 14, 2013
முன்னவர்பொப் ரேய் (இடைக்கால)
பாப்பினோ
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
அக்டோபர் 14, 2008
முன்னவர்விவியன் பார்பொட்
தனிநபர் தகவல்
பிறப்புஜஸ்டின் பியேர் ஜேம்சு துரூடோ
திசம்பர் 25, 1971 (அகவை 46)
ஒட்டாவாஒன்ராறியோகனடா
அரசியல் கட்சிலிபரல்
வாழ்க்கை துணைவர்(கள்)சோஃபி கிரேகோர் (தி. 2005–தற்காலம்)
பிள்ளைகள்சேவியர்
ஏட்ரியன்
எலா-கிரேசு
பெற்றோர்பியேர் துரூடோ
மார்கரெட் சின்கிளையர்
இருப்பிடம்மொண்ட்ரியால்
படித்த கல்வி நிறுவனங்கள்மக்கில் பல்கலைக்கழகம்
பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகம்
தொழில்ஆசிரியர்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
இணையம்justin.ca
னடா... உலகின் வளமையான செழிப்பான நாடுகளுள் ஒன்று. உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான கனடாவின் மக்கள் தொகை நான்கு கோடி. ஒட்டோவா இதன் தலைநகரம். வான் கூவர், டொரோன்டோ, மான்ட்ரீயல் போன்ற நகரங்களும் புகழ்பெற்றவை. கனடா என்றதும் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வரும்... அது நயாகரா அருவி. கனடா நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலகம் முழுக்கச் சென்று தொழில்முனைவோர்களாகும் சீக்கியர்கள் லட்சக்கணக்கில் இங்கு வசிக்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இந்நாடு அடைக்கலம் கொடுத்துள்ளது. ஆதரவற்றவர்களுக்குத் தாராளமாக இடம் கொடுக்கும் கருணைமிக்க நாடு. மனித உரிமை மீறினால் உடனடியாக தண்டனை அளிக்கப்படும் நாடு. இன, மொழி போன்ற பேதங்களுக்கு இங்கே இடமில்லை.
சப்பாத்தி உருட்டும் ஜஸ்டின் குடும்பம்
Photo Courtesy : Mathrubhumi
ஜஸ்டினுக்கு முன்னர் வேறு எந்த கனடா பிரதமரும் இந்தியாவில் இவ்வளவு பாப்புலர் ஆனதில்லை. சொல்லப் போனால் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வந்தபோது, வழக்கத்துக்கு மாறாக பிரதமர் மோடி விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். `மை ஃப்ரெண்ட்’ என்று கமல் பாணியில் கட்டியணைத்தார். ஆனால், ஜஸ்டினை வரவேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் கூட போகவில்லை. மோடியுடன் சேர்ந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளியாகாத நிலையிலும் ஜஸ்டின் மட்டுமல்லாமல் அவரின் குடும்பமே இந்தியா முழுவதும் பாப்புலராகியிருக்கிறது.
பொங்கல் பண்டிகையின்போது பாரம்பர்ய வேஷ்டி- சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய தருணத்தில் தமிழர்களின் மனதில் இடம் பிடித்த ஜஸ்டின், 8 நாள் சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். இங்கே ஜஸ்டின் குடும்பமே பாரம்பர்ய இந்திய  உடைகளில் வலம் வருவதுதான் ஹைலைட்!
ஜஸ்டினின் பின்னணியை ஆராய்ந்தால் சுவாரஸ்யம் நிறைந்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் குடும்பமே அரசியல் குடும்பம்தான். ஒட்டாவைச் சேர்ந்த இவரின் தந்தை பிர்ரே எலியட் ட்ரூடோ, கனடாவின் முன்னாள் பிரதமர். 1971- ம் ஆண்டு பிறந்த ஜஸ்டின், பட்டம் பெற்ற பின், ஆசிரியராகப் பணி புரிந்தார். 2013-ம் ஆண்டு கனடா லிபரல் கட்சியின் தலைவராகி, 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். கனடாவின் இரண்டாவது இளம் பிரதமர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பிரதமர் பதவி ஏற்கும் போது இவருக்கு வயது 43. முன்னதாக, ஜோ கிளார்க் 39 வயதில் கனடா நாட்டு பிரதமர் ஆகியிருந்தார்.
குத்துச்சண்டை வீரராக ஜஸ்டின்
குழந்தைமுகத்துடன் காட்சியளிக்கும் ஜஸ்டின் எரிமலை போன்றவர். இளைஞராக இருந்தபோது மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரராக வலம் வந்தவர். களத்தில் பலமுறை எதிரிகளின் முகத்தை உடைத்துள்ளார். ஆனாலும், கருணையுள்ளம் கொண்டவர். பல அறக்கட்டளைகள், `நீங்கள் களம் இறங்கினால், ஏராளமான நிதி திரளும். எங்களுக்காக ஒரு போட்டியில் பங்கேற்க வேண்டும்’ என்று அன்புடன் கோரிக்கை வைக்கும். தட்டாமல் ஜஸ்டினும் போட்டிகளில் பங்கேற்று நிதி திரட்ட உதவுவார். 
டாட்டூ குத்திக் கொள்வதிலும் அவருக்கு அலாதி பிரியம் உண்டு. உடலில் இரண்டு டாட்டூ குத்தியுள்ளார். ஜஸ்டின் மனைவி ஷோஃபி, இவரின் சகோதரர் மிக்கேலின் கிளாஸ்மேட். அந்த வகையில், ஜஸ்டின் வீட்டுக்கு வந்து போய் கொண்டிருந்தபோது காதல் 'க்ளிக்' ஆகி விட்டது. 2004-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு யெல்லா க்ரேஸ் மார்க்கரெட், ஜேவியர் ஜேம்ஸ், ஹெர்டினின் என்ற மூன்று குழந்தைகள். 
கனடாவில் ஏராளமான இந்தியர்கள் வசிப்பதால் இந்தியா மீது ஜஸ்டினுக்கு அவரை அறியாமலேயே ஒரு காதல். நீண்ட நாள்களாக இந்தியா வருவதில் முனைப்பு காட்டிக்கொண்டிருந்தார். அதற்கான காலம் கணிந்து, குடும்பத்தோடு இந்தியா விசிட் அடித்துள்ளார். இந்தியாவில் கால் பதித்தவுடன் தாஜ்மகாலை குடும்பத்துடன் சென்று பார்த்து ரசித்தனர். அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் ஜஸ்டின் சிவப்பு நிற குர்தா அணிந்தும், ஷோஃபி ஐவரி வர்ண சுரிதார் அணிந்தவாறும், குழந்தைகளுடன் ராட்டை சுற்றிய புகைப்படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியாகி மனதைக் கொள்ளைகொண்டது.
இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின்
பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்ற ஜஸ்டின் குடும்பத்துக்குப் பொற்கோவிலில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சீக்கிய மக்களின் அன்பில் திளைத்த ஜஸ்டீன் குடும்பம், பொற்கோவிலின் மிகப் பெரிய லங்கரைச் சுற்றிப் பார்த்து வியந்தது. லங்கர் செயல்படும் விதத்தையும் ஜஸ்டின் தம்பதியர் கேட்டு அறிந்தனர். லங்கரின் சமையல் அறையில் சப்பாத்தி உருட்டியும் மகிழ்ந்தனர். பாரம்பர்ய பஞ்சாபி உடையில் ஜஸ்டின் சோஃபி தம்பதி சப்பாத்தி உருட்டும் புகைப்படங்கள் நேற்றைய ஹைலைட்.  

No comments:

Post a Comment

Featured Posts

BLACKMART for get paid apps free